தனக்குத் தானே பிரசவம் பார்த்து பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்துள்ள மான்பூண்டி ஆற்றில் முட்புதரின் நடுவில் குழந்தையின் அழுத சத்தம் கேட்டது. இந்த சத்தத்தை கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது முட்புதரில் பச்சிளம் பெண் குழந்தை கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். உடனே அவர்கள் அந்த குழந்தையை மீட்டு மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன. இத்தகவலறிந்த காவல்துறையினர் குழந்தையை வீசி சென்ற தாயார் யார்? என்று விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் சிறிது நேரத்தில் உடலில் உடலில் காயங்களோடு ரத்தத்துடன் அங்கு இருக்கின்ற கோவில் அருகில் பெண்ணொருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதுகுறித்து போலீசார் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து காவல் துறையினர் கூறியதாவது, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பெண்தான் முட்புதரில் கிடந்த குழந்தையின் தாய் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்தப் பெண் மணப்பாறை அருகில் இனாம்ரெட்டியபட்டியில் வசித்த 38 வயதுடைய சசிகலா என்பதும், அவருக்கு ஏற்கனவே எட்டு வயதில் ஒரு மகள் உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இவருடைய கணவர் இறந்துவிட்டதால் திருப்பூரில் தனியாக வசித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான அவர் முட்புதரில் தனக்குத்தானே பிரசவம் பார்த்துக் கொண்டு அருகே இருக்கின்ற கோவில் வளாகத்திற்கு சென்று படுத்துக் கொண்டதும் தெரியவந்துள்ளது. தாய்க்கும், சேய்க்கும் மணப்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.