தனது கெரியரில் கவனம் செலுத்தும் ஐஸ்வர்யா தற்போது சந்தோஷமாக உள்ளார்.
தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்நிலையில் முசாபிர் பாடலை இயக்கி வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருவதையடுத்து தற்போது ஓம் சாந்தி என்ற இந்தி படத்தை இயக்க தயாராகி வருகின்றார் ஐஸ்வர்யா. இத்திரைப்படத்தின் மூலம் ஐஸ்வர்யா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
மேலும் ஐஸ்வர்யாவை சந்தித்த லாரன்ஸ், “துர்கா” திரைப்படத்தை இயக்கமாறு கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு ஐஸ்வர்யா சரி எனக் கூறி படத்தை இயக்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு பாடலை இயக்கலாம் என வந்த ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருவதால் இது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய செய்திருக்கின்றது இதனால் ஐஸ்வர்யாவும் சந்தோஷத்துடன் இருக்கின்றார்.