உத்தர பிரதேசம் அம்ரோஹா மாவட்டம் மலக்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார். அவரது 18 மாத ஆண் குழந்தை திடீரென காணவில்லை. இதையடுத்து குழந்தையைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இரண்டு நாட்கள் கழித்து கிராமத்திற்கு வெளியே உள்ள கரும்பு தோட்டத்தில் ஒரு குழந்தையின் உடல் பாகங்கள் இருப்பதாக ஒருவர் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். பிறகு அங்கு வந்த போலிஸார் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை செய்தபோது காணாமல்போன ரமேஷ் குமாரின் குழந்தை என்று தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்தபோது போலிஸாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
ரமேஷ் குமாரின் சகோதரருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் பிறந்த உடன் இறந்துள்ளன. இதையடுத்து சகோதரரின் மனைவி சரோஜா தேவி கர்ப்பமடைந்துள்ளார். இந்த குழந்தை நன்றாகப் பிறக்க வேண்டும் என நினைத்து இந்த தம்பதியினர் சாமியார் ஒருவரைச் சந்தித்துள்ளனர்.அந்த சாமியார், குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து அவர்கள் தனது தம்பி மகன் குழந்தையை நரபலி கொடுத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.