Categories
உலக செய்திகள்

“தனக்கு மட்டும்தான் குளிரா மக்களுக்கு இல்லையா”… ரகசிய ஹீட்டர் வைத்துக்கொண்ட வடகொரியா அதிபர்… தொடரும் அட்டூழியங்கள் ….!!!

தந்தைக்கு மரியாதை  செலுத்தும் நிகழ்ச்சியில் தங்களுக்கு மட்டும் ஹீட்டர்கள் வைத்துக்கொண்டு மக்களை குளிரில் நிற்க  வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடகொரியாவின் அதிபர் கிம் ஜோங் உன்ஆவர். இவரது தந்தை கிம் ஜாங் 2  பிறந்த தினம் பிப்ரவரி 16ம் தேதி  ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை( பிப்ரவரி 15)ஆம் தேதியன்று இரண்டாவது பிறந்த தினத்தை முன்னிட்டு சாமிஜியோன்  நகரில் சிறப்பு கூட்டம் நடந்தது. கடந்த ஜூலை 2019ஆம் வருடத்திற்கு  பிறகு வடகொரியா நகரில் நடந்த முதல் தேசிய கூட்டம் இதுவாகும். தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  சம்ஜியோன் நகரரில்  அதிபர் கிம் ஜோங் உன்னின் அறிவுறுத்தலின் பெயரில் இந்த கூட்டம் சீரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இவர் நாட்டின் முன்னாள் தலைவர் என்பதால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் மரியாதை செலுத்த வர  வேண்டும். வான  வேடிக்கையுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் உறையும் குளிரில் நூற்றுக்கணக்கான மக்களை நிற்கவைத்துள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் குளிர் 15 டிகிரி செல்சியஸ் ஆகும். இந்நிகழ்ச்சி பங்கேற்றவர்கள் எந்தவித கையுறை , வெப்பமூட்டும் கருவிகளும் இல்லாமல் நின்றுகொண்டிருந்தது புகைப்படங்கள் மூலம் நாம் அறியலாம். ஆனால் மேடையில் இருந்தவர்களுக்கு மட்டும் அங்கு விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் கீழாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும்,  ஹீட்டர்கள்   வைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |