Categories
சினிமா தமிழ் சினிமா

தனது அக்காவுடன் சிறுவயதில் தொகுப்பாளர் ரக்சன்… வைரலாகும் செம கியூட் புகைப்படம்…!!!

தொகுப்பாளர் ரக்சன் தனது அக்காவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமானவர் ரக்சன். இதையடுத்து இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தார். மேலும் இவர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார்.

சமீபத்தில் ரக்சன் தனது மனைவியின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரக்சன் தனது அக்காவுடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த கியூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |