மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது. இதற்கான நடைமுறைகள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தொடங்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்பை விவசாயிகள் மகிழ்ச்சியாக வரவேற்றனர். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், பிரதமர் இந்த அறிவிப்பை ‘குரு புராப்’ தினத்தில் அறிவித்தது கூடுதல் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது. இந்த அறிவிப்பு ஒவ்வொரு இந்தியரின் நலனைத் தவிர பிரதமருக்கு வேறு சிந்தனை ஏதும் இல்லை என்று தெரிகிறது. மேலும் இந்த அறிவு மூலம் தனது மிகச்சிறந்த அரசியல் திறனை வெளிப்படுத்தியுள்ளார்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.