நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை பகிர்ந்துள்ளார்.
இந்திய திரைப்பட நடிகையான ப்ரியா பவானி சங்கர் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சித் தொடரில் நடித்ததன் மூலமாக பிரபலமானார். இதனை அடுத்து ஜெயம் ரவியுடன் அகிலன், ராகவா லாரன்ஸுடன் ருத்ரன் மற்றும் எஸ். ஜே. சூர்யாவுடன் பொம்மை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது சிம்பு, கௌதம் கார்த்திக் உடன் இணைந்து “பத்து தல” என்ற திரைப்படத்திலும், நடிகர் கமலஹாசனின் “இந்தியன் 2″ திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். இவர் சமீபத்தில் நடிகர் எஸ். ஜே. சூர்யாவுடன் காதலில் இருப்பதாக வதந்தி கிளம்பியது. இதனைக் கேட்ட நடிகை பிரியா பவானி சங்கர் கோபமானார். இதனைத் தொடர்ந்து தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ” நாங்கள் எங்கள் புதிய வீட்டில் முதல் அடியெடுத்து வைத்து எங்கள் வாழ்க்கையை ஆரம்பிக்கின்றோம்” என்று அவர் கூறியுள்ளார். இதனைக் கண்ட சக நடிகர்கள், நடிகைகள் மற்றும் ரசிகர்கள் என பலரும் பிரியா பவானி சங்கருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.