தனது கெரியரில் இதுவரை செய்யாத காரியத்தை லத்தி திரைப்படத்திற்காக செய்துள்ளார் விஷால்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். இவர் தற்போது லத்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகின்றார். சுனைனா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தை ராணா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கின்றது.
இத் திரைப்படமானது தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படமானது ஐதராபாத்தில் ஷூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்று இறுதிகட்ட படப்பிடிப்பு பணியானது சென்னையில் நடந்து வருகின்றது.
இந்த நிலையில் விஷால் தனது கெரியரிலேயே முதல்முறையாக திருமணமாகி 7 வயது சிறுவனுக்கு தந்தையாக நடிக்கின்றார். இத்திரைப்படத்தில் இவரின் மனைவியாக சுனைனா நடிக்கிறார். மேலும் இத்திரைப்படத்திற்காக விஷால் வொர்க் அவுட் செய்து தனது உடல் எடையை அதிகரித்திருக்கின்றார். இவர் தான் ஒர்க்அவுட் செய்த வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டிருந்த நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் அவரின் கடின உழைப்பை வெகுவாக பாராட்டி இருக்கின்றனர்.