நடிகை எமி ஜாக்சன் நேற்று தனது மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஆர்யா நடிப்பில் வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். இந்த படத்தில் இவர் சிறப்பாக நடித்து ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து இவர் தாண்டவம், தெறி, தங்கமகன், ஐ போன்ற படங்களில் நடித்திருந்தார். இதன் பின் எமி ஜாக்சனுக்கு அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை . மேலும் இரண்டு வருடங்களுக்கு முன் எமி ஜாக்சன் ஒரு அழகிய ஆண் குழந்தைக்கு தாயானார் .
https://www.instagram.com/p/CT7AAIbKQeq/?utm_source=ig_embed&ig_rid=9fdb2861-7faf-49f4-baf9-ce48353ab78e
கடந்த இரண்டு வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருக்கும் எமி ஜாக்சன் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் . இந்நிலையில் எமி ஜாக்சன் நேற்று தனது செல்ல மகனின் இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். மேலும் தனது மகனின் அழகிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.