முதல் முறையாக தெலுங்கில் பிசாசு2 திரைப்படத்திற்காக டப்பிங் பேசியுள்ளார் நடிகை ஆண்ட்ரியா.
தமிழ் சினிமா உலகில் பிரபல பாடகியான ஆண்ட்ரியா தற்பொழுது நடிப்பிலும் அசத்தி வருகின்றார். இவர் தற்பொழுது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தி முக்கிய வேடத்தில் நடித்து இருக்கின்றார்.
இத்திரைப்படத்தில் பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். ராக்போர்ட் நிறுவனம் தயாரிக்க கார்த்திக் ராஜா இசையமைத்திருக்கிறார். அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றது. இதன்படி விஜய் சேதுபதி படத்தின் டப்பிங் பணியை முடித்து இருப்பதாக மிஸ்கின் கூறியுள்ளார்.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் தெலுங்கு வெர்சனுக்கான டப்பிங்கை ஆண்ட்ரியா நிறைவு செய்து இருக்கின்றார். தெலுங்கிலும் தனது சொந்த குரலில் டப்பிங் பேசுவது இதுவே முதல்முறையாக இருக்கின்றது. டப்பிங் ஸ்டூடியோவில் தெலுங்கு வார்த்தைகளை அவர் உச்சரித்து பழகும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.