இங்கிலாந்து பிரதமராக கடந்த மாதம் பதவியேற்ற லீஸ் டிரஸ் வரி குறைப்புகளை ஆதரிக்கும் விதமாக திட்டங்களை வெளியிட்டுள்ளார். மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதனை கடன் வாங்கி சமாளித்து விடலாம் என கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு பிரதமரின் சொந்த கட்சி எம்பிக்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கின்ற நிலையில் இந்த திட்டத்தை பிரதமர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து பிரதமர் லிஸ்ட் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் நிதி மந்திரி குவாசி குவார்ட்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ்டஸ் உத்தரவிட்டிருக்கின்றார்.
ஜெரமி ஹண்ட் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதை அடுத்து இந்திய வம்சாவளி பெண்ணான சுவைல்லா பிரேவர்மேன் உள்துறை மந்திரி பதவியில் இருந்து விலகி உள்ளார். இதனை அடுத்து நெருக்கடி ஏற்பட்ட சூழலில் பிரதமர் இன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கின்றார் பதவியேற்ற 45 நாட்களில் அவர் பதவி விலகிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. என்னை தேர்வு செய்ததற்காக இலக்கை அடைய முடியாததால் ராஜினாமா செய்கிறேன் என லிஸ்ட்டிரஸ் தெரிவித்துள்ளார். இன்னும் ஒரு வாரத்தில் அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படுவார் எனவும் கூறியுள்ளார்.