Categories
சினிமா தமிழ் சினிமா

தனது மகனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த சாண்டி மாஸ்டர்… கியூட் புகைப்படம்…!!!

சாண்டி மாஸ்டர் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் சாண்டி மாஸ்டர். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடைசியாக இவர் கர்ணன், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களுக்கு நடனம் அமைத்திருந்தார். மேலும் சாண்டி மாஸ்டர் மற்றும் சில்வியா தம்பதியினருக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

Gallery

இந்நிலையில் சாண்டி மாஸ்டர் முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் தனது மகனுக்கு ஷான் மைக்கேல் என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த அழகிய புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

 

Categories

Tech |