நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் விஐபி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சிம்ரன். இதன்பின் இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
கடந்த 2003-ஆம் ஆண்டு சிம்ரன் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் சிம்ரன் தனது மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சிம்ரனின் மகன்கள் நன்றாக வளர்ந்து விட்டார்களே என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.