Categories
சினிமா தமிழ் சினிமா

தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்ட சிம்ரன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்…!!

நடிகை சிம்ரன் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ‌.

தமிழ் திரையுலகில் நடிகை சிம்ரன் விஜய், அஜித் ,விக்ரம், சூர்யா என பல  முன்னணி கதாநாயகர்களின்  திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் திருமணத்திற்குப் பின் சில காலம் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் . பின்னர் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்து திரிஷா இல்லனா நயன்தாரா, சீமராஜா, பேட்ட ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் .

தற்போது இவர்  ‘அந்தாதுன்’ ரீமேக் படத்தில் நடிகர் பிரசாந்துடன் இணைந்து நடிக்க இருக்கிறார் . இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்ரன் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் கையில் செல்போனுடன் சிம்ரன் போஸ் கொடுத்திருக்கிறார் .

Categories

Tech |