தமிழ் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்க்கையில் நடந்த மிராக்கிள் பற்றி கூறி நெகிழ்ந்திருக்கிறார்.
தமிழ் சினிமாவின் 2012ல் பீட்சா படத்தின் மூலம் அறிமுகமானார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதனை தொடர்ந்து ஜிகர்தண்டா ,இறைவி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட என பல புதுவிதமான படங்களை தமிழ் சினிமாவிற்கு தந்துள்ளார். தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான கவுதம் மேனன், சுதா கொங்கரா, ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்புராஜ், சுஹாசினி மணிரத்னம் ஆகியோர் இணைந்து ‘புத்தம் புது காலை’ என்ற ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கியுள்ளனர்.
கார்த்திக் சுப்புராஜ் அப்பபடத்திற்கு ‘மிராக்கிள்’ என்ற தலைப்பில் ஒரு கதையை இயக்கி இருக்கிறார். இதில் பாபி சிம்ஹா, முத்துக்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஆந்தாலஜி திரைப்படம் அக்டோபர் 16ல் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திக் சுப்புராஜிடம், வாழ்க்கையில் நடந்த மிராக்கிள் எது என்று கேட்டபோது , அதற்கு அவர் இயக்குனர் ஆனதே பெரிய மிராக்கிள் தான், பேட்ட படத்திற்காக ரஜினி சாரை சந்தித்ததும், அவரை வைத்து படம் இயக்கியதுதான் மிக பெரிய மிராக்கிள் என்று தெரிவித்துள்ளார்.