குடும்பத் தகராறில் வாலிபர் தனது வீட்டை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்திலுள்ள கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் பாக்யராஜ்- வைத்தீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த வைத்தீஸ்வரி தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் கோபத்தில் பாக்யராஜ் தனது வீட்டிற்கு தீவைத்து கொளுத்தி உள்ளார். இதனால் அருகில் இருக்கும் சுசிலா என்பது வீட்டிற்கும் தீ பரவி எரிய ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் 2 வீடுகளிலும் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.