Categories
மாநில செய்திகள்

தனித் தேர்வர்களுக்கான 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. செப்டம்பர் 6 முதல் விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தனி தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது..தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகின்ற அக்டோபர் 10 முதல் 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கு தனி தேர்வர்கள் வருகின்ற செப்டம்பர் ஆறு முதல் பத்தாம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணைய வழியில் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் 125 ரூபாய் மற்றும் ஆன்லைன் கட்டணம் 50 ரூபாய் என மொத்தம் 175 ரூபாய் சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம். குறிப்பிட்ட நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தட்கல் விண்ணப்ப கட்டண தொகை 500 ரூபாய் கூடுதலாக செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். குறிப்பாக ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |