Categories
மாநில செய்திகள்

தனித் தொகுதிகளிலும் தடம் பதித்த திமுக கூட்டணி… 29 தொகுதிகளை வசப்படுத்தியது…!!

தனித் தொகுதிகளிலும் திமுக தடம் பதித்தது. மொத்தம் 29 தொகுதிகளை தன்வசப்படுத்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொது தொகுதிகள் மட்டுமல்லாமல் தனித் தொகுதிகளில் சிறப்பான வெற்றியை பெற்றது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக 46 இடங்களில் தனித்து போட்டியிட்டது. 14 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது .அதிமுக  32 இடங்களை கைப்பற்றியது. விசிக, இடதுசாரிகள் இடம்பெறவில்லை.  ஆனால் இந்த முறை திமுக கூட்டணி 29 தொகுதிகளை கைப்பற்றியது .

அதில் திமுக எம்எல்ஏக்கள் 22 பேர், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா இரண்டு தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. இந்த முறை அதிமுக கூட்டணியில் 17 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. திமுக வெற்றி பெற்றதற்கு விசிக, இடதுசாரிகள் கூட்டணியில் அங்கம் வகித்தது ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் பட்டியலின மக்களின் வாக்குகளைக் கவரும் வகையிலான கட்சிகள் இல்லாததே தனித்தொகுதியில் பிரகாசிக்க முடியாத காரணம் எனவும் கூறப்படுகிறது.

Categories

Tech |