வருகின்ற பங்குனித் திருவிழாவின் போது கோயில்களில் தனிநபருக்கு அர்ச்சனை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முக்கிய பகுதிகளில் கூட்ட நெரிசலை தவிர்த்தல் போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 26 இல் நடக்கும் பங்குனித் திருவிழாவின் முக்கிய விழாவான 63 நாயன்மார்கள் வீதி உலாவின் போது தனிநபர் அர்ச்சனை செய்வது தவிர்க்கப்படுவது அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரநந்தி காட்சி, நாயன்மார்கள் வீதி உலா, திருக்கல்யாண உற்சவம் ஆகியவை யூடியூப் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.