Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனிநபர் உரிமை பெறுவது எப்படி?….. மலைவாழ் மக்களுடன் உரையாடிய மாவட்ட ஆட்சியர்….!!!

மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியர் உரையாடினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒருநூறாம்வயல், தச்சமலை, வட்டப்பாறை போன்ற கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த்  ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வின் போது மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து தனிநபர் சட்டத்தின் கீழ் உரிமை பெறுவது எப்படி என்பது குறித்து கலந்தாலோசனை செய்தார். அதன்பின் மலைவாழ் மக்களின் குறைகளை கேட்டறிந்தார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில் குமரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர் மக்களுக்கு தனி நபர் சட்டத்தின் கீழ் உரிமை வழங்குவதற்காக கிராம சபை கூட்டங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக செறுகிடத்திக்காணி, வள்ளத்திமாவு், தோவடி, ஆனைப்புலம், கீழமலை, புளிமூட்டு சாலை, ஒருநூறாம்வயல், கற்றுவா, மேல்மண்ணடி, கல்லறவயல் போன்ற பகுதிகளில் ஆய்வு செய்து அப்பகுதி மக்களுடன் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடனம்பொற்றை, களப்பாரை, தச்சமலை, முடவன் பொற்றை, வட்டப்பாறை, வெள்ளாறை, தலக்குமலை, புறத்திமலை போன்ற பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இங்கு வசிக்கும் மக்களிடம் தனிநபர் உரிமை சட்டத்தின் கீழ் உரிமை வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் கேட்டறியப்பட்டுள்ளது. இவ்வாறாக மாவட்ட ஆட்சியர் கூறினார். இதற்கிடையில் வட்டப்பாறை பகுதியில் அமைந்திருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஆய்வு மேற்கொண்டார். அவர் அங்கு படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு இனிப்பு வழங்கினார்.

Categories

Tech |