காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் கண்ணன் சமீபத்தில் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களில் கழிவுநீர் தொட்டிகள் மற்றும் கழிவு நீர் குழாய்களில் பழுது பார்க்கும் வேலையை தனி நபரிடம் கொடுக்கக் கூடாது. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்கு விதிகளுக்கு புறம்பாக தனிநபரை நியமிப்பது சட்டப்படி குற்றமாகும்.
அப்படி செய்து உயிரிழப்பு ஏற்பட்டால் வீட்டின் உரிமையாளர்களும், ஒப்பந்ததாரர்களும் அதற்கு பொறுப்பு. எனவே கழிவு நீர் தொட்டியை எந்திரங்கள் மூலமாக மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும். மனிதர்கள் மூலம் கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட அடைப்பை அகற்றுவது மற்றும் சுத்தம் செய்வது குறித்து அறிந்தால் 18004252801 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.