Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனிமையில் இருந்த தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வடசேரி சக்தி கார்டன் பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணியன்(54) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியனின் மனைவி இறந்துவிட்டார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் சுப்பிரமணியனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால் சுப்பிரமணியன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் தனிமையில் இருந்த சுப்பிரமணியன் மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |