கேரளா மாநிலம் திருச்சூர் அருகே கொடுங்கல்லூரில் உள்ள தொழிலதிபர் ஒருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் தேவ் என்ற இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். இந்நிலையில் அந்த பெண் கணவர் கோவில் துபாயில் இருப்பதாகவும் தனிமையில் சந்திக்க வீட்டிற்கு வருமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதை நம்பிய தொழிலதிபர் பாலக்காடு அருகில் உள்ள யாக்கரை பகுதியில் உள்ள வீட்டில் இளம் பெண்ணை தனிமையில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்து 5 பேர் கொண்ட கும்பல் தொழிலதிபரே தாக்கி ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை எடுத்துள்ளனர். தங்களுக்கு பணம் தராவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என்று மிரட்டி அந்த கும்பல் கழுத்தில் கிடந்த 4 சவரன் தங்க செயின், செல்போன், ஏடிஎம் கார்டு, கார், ரூ.10,000 பணம் மற்றும் காரில் இருந்த ஒரு சில ஆவணங்களையும் பறித்துக்கொண்டனர்.
மேலும் பணம் கேட்டு அந்த கும்பல் மிரட்டியது. அதற்கு அவர், வீட்டிற்கு சென்றதால் பணம் கொடுக்க முடியும் என தொழில் அதிபர் கூறியுள்ளார். இதனையடுத்து அவரை காரில் ஏற்றி அந்த கும்பல் கொடுங்கலுருக்கு அழைத்துச் சென்றபோது வழியில் தொழிலதிபர் காரில் இருந்து குத்தி தப்பி ஓடி உள்ளார். அதன் பிறகு பாலக்காடு தெற்கு காவல் நிலையத்துக்கு சென்ற தொழில் அதிபர் நடந்த விவரங்களை விவரமாக கூறியுள்ளார். உடனே போலீசாரம் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி instagram பிரபலம் கண்ணூர் கோகுல் தீப், அவரது மனைவி தேவ் உள்ளிட்ட சரத்(24), அஜித்(20), வினய்(24), ஜிஸ்னு(20) ஆகிய 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், இன்ஸ்டாகில் தன்னிடம் அறிமுகமாகும் நபர்களை ஆசை வார்த்தை கூறி நகை, பணம் பறிப்பது இந்த கும்பல் செய்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் விசாரணைக்கு பிறகு பாலக்காடு நீதிமன்றத்தில் 6 பேரையும் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.