சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டத்தில் உள்ள முத்துப்பட்டி கண்மாய்கரை பகுதியில் முருகேசன்(62) என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் முருகேசனை கைது செய்தனர்.