Categories
உலக செய்திகள்

தனியாக இருக்கும் பெண்களை குறி வைக்கும் நபர்…. முக்கிய ஆதாரத்தை வெளியிட்ட போலீசார்…. பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் சாலைகளில் தனியாக நின்று கொண்டிருக்கும் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

பிரிட்டனில் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி டோட்டன்ஹம் என்ற பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தனியாக நின்று கொண்டிருக்கும்போது முகம் தெரியாத நபர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் செல்போனில் ஆபாச படங்களை காட்டி தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்துள்ளார். அதன்பின்னர் அதே நபர் கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இரவு 7 மணிக்கு ஸ்டாம்போர்ட் ஹில் என்ற பகுதியில் தனியாக நின்று கொண்டிருந்த 12 வயது சிறுமியிடம் ஆடைகளை கழற்றி பாலியல் தொல்லை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதனால் பயந்துபோன அந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால் அவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். அதன் பின்னர் அந்த நபர் இரவு 9 மணிக்கு அதே பகுதியில் குழந்தையுடன் சென்று கொண்டிருந்த 20 வயது பெண்ணை வழிமறித்து பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் அந்த நபரின் முகம் பதிவாகியது தெரியவந்துள்ளது.

அந்த புகைப்படத்தை வைத்து காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்ட நபரை தேடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது காவல்துறையினர் அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிக்கடி காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |