வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்து தாத்தையங்கார்பட்டியில் மோனிகா(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்ஜினீயரிங் முடித்துவிட்டு அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மோனிகா திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மோனிகாவை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி மோனிகா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து மோனிகாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் மோனிகா தற்கொலை செய்து கொண்டதர்க்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.