Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த ஊழியர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மனைவி பிரிந்து சென்றதால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புதூர் செட்டிமேடு கிராமத்தில் முத்துக்குட்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துக்குட்டி சென்னையை சேர்ந்த செல்லம்மாள் என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் கோபத்தில் செல்லம்மாள் தனது மகனுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் இருந்த முத்துக்குட்டி தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துக்குட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |