டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை பகுதியில் வேன் டிரைவரான செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செந்திலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த செந்தில் தனது மனைவி கடைக்கு சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு திரும்பி வந்த செந்திலின் மனைவி தனது கணவர் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செந்திலின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.