சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி நாகதேவன்பாளையம் பகுதியில் செங்கோட்டையன்(59) என்பவர் வசித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் செங்கோட்டையன் கருக்கம்பள்ளியில் இருக்கும் வாகன பழுது நீக்கும் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக இருந்த 9 வயது சிறுமிக்கு செங்கோட்டையன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் செங்கோட்டையனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஈரோடு மகளிர் நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு அரசு சார்பில் 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.