தூய்மை பணியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ராஜசேகருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ராஜசேகர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜசேகரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜசேகர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.