Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தனியாக இருந்த பெண்ணை மிரட்டி…. வாலிபர் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

வீட்டின் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 9 பவுன் தங்க தாலியை பறித்துக்கொண்டு தப்பியோடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் வல்லபை நகர் 5 வது தெருவில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். தற்போது விஜய் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் இவரது மனைவி சுகன்யா வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு சுகன்யா வீட்டின் முன்புறம் அமர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது குழந்தைகளுக்காக தண்ணீர் எடுப்பதற்காக உள்ளே சென்ற சுகன்யா மீண்டும் வெளியே வரும்போது மர்ம நபர் ஒருவர் திடீரென வீட்டிற்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதனையடுத்து சுகன்யா அணிந்திருந்த 9 பவுன் தங்க தாலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுகன்யா இதுகுறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் சுகன்யா வீட்டிற்கு அருகே கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்த மதுரையை சேர்ந்த கணேசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சுகன்யா வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து திட்டம் போட்டு நகையை பறித்ததும் தெரியவந்தது. இதனையறிந்த காவல்துறையினர் மதுரைக்கு விரைந்து சென்று கணேசனை கைது செயுள்ளனர். இதனையடுத்து அவரிடம் இருந்த 9 பவுன் தங்க தாலியையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |