Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த பெண்…. வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

தம்பதியினாரிடையே ஏற்பட்ட தகராறில் பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அக்ராபாளையம் காலனி பகுதியில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷர்மிளா என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் 2 வயதில் லிங்கேஷ் மற்றும் லித்ஷாஸ்ரீ என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஷர்மிளா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஷர்மிளாவின் தாயார் தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி ஆரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |