Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தனியாக இருந்த மனைவி…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சின்னகுக்குண்டி கிராமத்தில் விவசாயியான சுந்தரமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரண்யா(26) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்ட சரண்யா பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்து சரண்யா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை அடுத்து வீட்டிற்கு வந்த சுந்தரமூர்த்தி தனது மனைவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |