வீட்டில் தனியாக இருந்த வாலிபர் திடீரென தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஆவத்திபாளையம் பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய 2-வது மகன் பிரகாஷ்(25) படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பள்ளிபாளையம் போலீசார் பிரகாஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து பிரகாஷ் தற்கொலை செய்து கொண்டதற்க்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.