மத்திய பிரதேச மாநிலத்தில் தனியாக தூங்கிக் கொண்டிருந்த அண்ணியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த கொழுந்தனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் உள்ள சுகி-செவானியா என்ற பகுதியில் 28 வயதான பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். அந்தப் பெண்ணின் கணவர் ஒரு ஓட்டுனர் என்பதால் அடிக்கடி வேலை விஷயமாக வெளியூர் சென்று விடுவார். சம்பவம் நடந்த தினத்தன்றும் அவர் வேலை விஷயமாக வெளியூர் சென்று உள்ளார். இதை அறிந்த அப்பெண்ணின் கொழுந்தனார் அண்ணியை அடைய திட்டமிட்டார்.
அவர் தனது அண்ணனிடம் அவருக்கு துணையாக இன்று இரவு வீட்டில் தங்குவதாக கூறியுள்ளார். அவரும் எதார்த்தமாக சரி என்று தங்க வைத்துள்ளார். பிறகு நள்ளிரவில் எழுந்த மைத்துனன் அண்ணி உறங்கும் அறைக்கு சென்று அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கத்திக் கூச்சல் போட அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். பிறகு அவர் மீது அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.