போதைப்பொருள் தொடர்பான போட்டிக்காக கொலை செய்யப்பட்ட 12 சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தென் அமெரிக்கா நாடுகளில் மெக்சிகோ போதைப் பொருள் ஆதிக்கம் நிறைந்தது. அவ்வப்போது போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு இடையே நடக்கும் சண்டையில் ஏராளமானோர் கொல்லப்படுவதும் அந்நாட்டில் சாதாரணமான ஒன்று. இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு பகுதியில் இருக்கும் ஜான் லூயிஸ் மாகாணத்தில் கேட்பாரற்று 2 வேன் நின்றுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது அதிர்ச்சி தரும் விதமாக இரண்டு வேன்களில் இருந்தும் தலா 6 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது.
அதில் இரண்டு சடலங்கள் பெண்களுடையது. 12 சடலங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ள தொடங்கினர். அனைவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமன்றி வேனில் துண்டுச்சீட்டு ஒன்று கிடைத்துள்ளது. அதில் போதைப்பொருள் தொடர்பான போட்டியில் அவர்கள் கொலை செய்யப்பட்டதாக எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.