மனைவியை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்த கூலித்தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்துள்ள புத்தூர் சின்னத்தம்பி தோட்டம் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு மீனா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மீனா கோபித்துகொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் சக்திவேல் மனமுடைந்து வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து விரக்தியடைந்த சக்திவேல் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் வெகுநேரமாகியும் சக்திவேல் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சக்திவேல் பிணமாக தூக்கில் தொங்கி உள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சக்திவேலின் உடலை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராவிர்க்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.