வீட்டில் தனியாக இருந்த முதியவர் மர்மமான முறையில் இருந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் ஒலகாசி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அண்ணாமலை என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும் நான்கு மகள்களும் உள்ளனர். சகுந்தலா சில வருடங்களுக்கு முன்பு இறந்து இறந்துவிட்டார். மேலும் நான்கு மகள்களுக்கும் திருமணம் ஆகி அவரவர் கணவர்களுடன் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் அண்ணாமலை மட்டும் தனியாக வசித்து வருகின்றார். இவருக்கு விவசாய நிலம் உள்ளதால் அண்ணாமலை கிராமத்தை விட்டு எங்கேயும் செல்லாமல் அங்கேயே இருந்து விட்டதாக கூறப்படுகிறது.
மேலும் அண்ணாமலையை அவரது உறவினரான சித்ரா என்பவர் தான் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அண்ணாமலைக்கு சித்ரா உணவு கொடுக்க சென்றுள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் இருட்டாக இருந்துள்ளது. மேலும் அண்ணாமலை கட்டிலில் இருந்து கீழே விழுந்து இறந்து கிடந்துள்ளார். இது குறித்து சித்ரா அண்ணாமலையின் உறவினர்களுக்கும் மகள்களுக்கும் தகவல் கொடுத்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த அண்ணாமலையின் மகள்கள் விரைந்து வந்து அவரது உடலை வைக்க ப்ரீசர் பெட்டி வரவழைத்து மின் இணைப்பு கொடுக்க முயற்சித்துள்ளனர்.
ஆனால் பீஸ் கேரியர் பிடுங்கி இருந்ததால் யாரோ பீஸ் கேரியரை பிடுங்கி மின் தடை செய்தது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது மகள்கள் வீட்டை சோதனை செய்து பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் அறையில் உள்ள பீரோ திறக்கப்பட்ட நிலையிலும் பொருட்கள் சிதறிய நிலையிலும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பீரோவில் இருந்து சுமார் 30 பவுன் நகையும் பணமும் காணாமல் போனதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அண்ணாமலையின் மகள்கள் தனது தந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் நகை மற்றும் பணம் காணாமல் போனது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அண்ணாமலையின் உறவினர்கள் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பின் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதனை அடுத்து அண்ணாமலை தனியாக வசிப்பதை கவனித்து வந்த மர்ம நபர்கள் அவரை கொலை செய்துவிட்டு நகை பணத்தை திருடி சென்றார்களா என்று கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.