Categories
உலக செய்திகள்

தனியாக வீட்டில் இருந்த கோடீஸ்வர பெண்ணுக்கு… 17 வயது சிறுவனால் நேர்ந்த துயரம்… அதிர்ச்சி சம்பவம்…!!

கோடீஸ்வர பெண் ஒருவர் 17 வயது சிறுவனால் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனை சேர்ந்த Sue Addis (69) பெரிய ஹோட்டல்களை நடத்தி வந்துள்ளார். இவரின் ஹோட்டலுக்கு கால்பந்து வீரர்கள் உட்பட பல பிரபலமானவர்கள் அடிக்கடி வருவது வழக்கமாகும். இந்நிலையில் இந்த பெண் சில நாட்களுக்கு முன்பு தன் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். இதனைத்தொர்ந்து காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.  அதாவது ஒரு நபருக்கும் Sue க்கும் இடையே வாக்குவாதம் கடுமையாக ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நபர் இவரை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்.

இந்த கொலையில் 17 வயதுடைய சிறுவன் ஒருவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சிறுவனும் Sue வும் ஒருவருக்கொருவர் நல்ல பழக்கம் உடையவர்கள் என்று தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சிறுவனின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த சிறுவன் எந்த உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் இருந்துள்ளார். அதன்பின்பு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். மேலும் Sue நடத்திவந்த ஹோட்டல்களின் ஒட்டு மொத்த மதிப்பு $6 மில்லியன் என தெரியவந்துள்ளது.

Categories

Tech |