நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஒவ்வொருவரின் கோரிக்கையை ஒரு விதமாக இருக்கின்றது. கல்வியாளர்கள் எங்களிடம் கருத்து சொல்லும்போது, ஐந்து பாடத்திட்டங்கள் என்ற முறையில் மொழி படங்களை தவிர்த்து மூன்று படங்களை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். வேண்டுமென்றால் நான்கு பாடங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றார்கள். அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு கருத்துக்கள் முதலமைச்சரின் கவனத்திற்கு வந்தவுடன் , போன ஆண்டு எப்படி நடைமுறைப் படுத்தப்பட்டதோ ? அதேபோல ஆறு பாடத்திட்டங்களும் எல்லோரும் மாணவர்கள் படிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவிலே இல்லாத மாடல்:
13ம் தேதிக்கு பிறகு ஒவ்வொரு மாணவர்களும் பயிலும் வகையில் முதலமைச்சர் ஆன்லைன் பாடத் திட்டத்தை துவக்கி வைக்க இருக்கிறார்கள். நம் பாடத் திட்டம் இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு ஒரு மாடலாக அமையும். கவலைப்பட தேவையில்லை. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. பாடத்திட்டம் முதல் பாடங்களை நடத்தும் முறைகள் என அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதேபோல 5 கல்வி சேனல் ஒருங்கிணைந்து, இலவசமாக பாடத்தை வழங்க அட்டவணைப்படுத்த முயற்சி செய்யப்பட்டு இருக்கின்றது.
மாவட்டத்திற்கு 5 பேர்:
13ம் தேதிக்குப் பிறகு பாடப்புத்தகங்கள் அந்தந்த பள்ளிகளில் வழங்கிய இந்த பணிகள் விரைந்து நடைபெறும். இது தனியார் பள்ளிகளை மிஞ்சுகின்ற அளவிற்கு உருவாக்கப்படும்.பள்ளிக்கு வராதவர்கள், பள்ளி சான்றிதழை வாங்கி வேற பள்ளியில் சேர்ந்துவர்கள் மாவட்டத்திற்கு 5 பேர் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். அந்த பட்டியலை நாங்கள் தயாரித்த பிறகு 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் எப்படி நடைமுறைப் படுத்தலாம் என்று கல்வியாளர்களுடன் கலந்துபேசி முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று முடிவுகளை மேற்கொள்வோம்.
பேக்_குடன் புத்தகம் :
பாடப்புத்தகங்கள் அனைத்தும் பள்ளிக்கு வந்து விட்டது. பள்ளியிலே பாட புத்தகத்தை எடுத்துச் செல்வதற்கு பேக் வந்துவிட்டது. பேக்குடன் சேர்த்து பாடப்புத்தகம் அப்படியே வழங்கப்படும். கொரோனா வைரஸ் இருக்கிறது. இதற்கு பிறகு பள்ளிகளுக்கு வழங்கப்படும் கூடுதல் சலுகை குறித்து கேளுங்கள். மொத்தமாக 34 ஆயிரத்து 482 பேர் 24 ஆம் தேதியன்று கடைசித் தேர்வு எழுதுவதற்கு வர இயலவில்லை. 23ம் தேதியில் ஊரடங்கு என்ற காரணத்தின் அடிப்படையில் பேருந்து இல்லை என்பதால் தேர்வு எழுத முடியவில்லை.
718 பேர் தான்:
தேர்வு எழுதாமல் விடுபபட்ட மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதற்கான ஆணையை முதல்வர் பிறப்பித்துள்ளார்.ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதாமல் விடுபட்ட எல்லாரிடமும் எத்தனை பேர் எழுத விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்று கேட்டிருக்கின்றோம். 718 பேர் தான் எழுதுகிறார்கள். யார் வேண்டுமானாலும் எழுதலாம் ? அதற்கான ஆயத்த பணிகளை அரசு செய்துகொண்டிருக்கிறது. தேர்வு எழுதி முடிந்தவுடன் மூன்று அல்லது 4 நாட்களுக்குள் தேர்வு முடிவுகளை அறிவிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நீட் பயிற்சி:
தனியார் பள்ளி கட்டணத்தை அரசே ஏற்கவேண்டும் என்று ஒரே சிலர் கோரிக்கை வைத்துள்ளனர் என்ற கேள்விக்கு, யார் வேண்டுமானாலும் ? எதை வேண்டுமானாலும் ? சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதற்கு நிதி இருக்கிறதா ? என்பதை தான் யோசிக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார். நீட் தேர்வு வகுப்புகளை இ பாக்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றது. 7000 பேருக்கு முழு பயிற்சி அளிக்கப்பட்டு இருக்கிறது.
மடிக்கணினி இருக்கு:
அனைவரிடமும் லேப்டாப் இருக்கிறது. இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் மடிக்கணினி திட்டம் இல்லை. நம்முடைய தமிழ்நாட்டில் மட்டும்தான் இருக்கிறது. 48 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கிய வரலாறு தமிழ்நாட்டில் மட்டும்தான்.இந்த ஆண்டு பிளஸ் டூ படிக்கிற மாணவர்களுக்கு லேப்டாப் இருக்கின்றது. இதை வைத்துக்கொண்டு மாணவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பான முறையில் அமைத்துக் கொள்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. தனியாரிடத்திலேயே ஆன்லைன் மட்டும் தான் இருக்கிறதே தவிர எங்களிடம் மடிக்கணினி இருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.