Categories
தேசிய செய்திகள்

தனியார்மயமானால் மக்களுக்கு தான் ஆபத்து… ராஜா ஸ்ரீதர் கண்டனம்…!!!

ரயில்வே துறை தனியார்மயமானால் மக்களுக்கு தான் அதிக ஆபத்து ஏற்படும் என மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

அதுமட்டுமன்றி ரயில்வே துறை தற்போது தனியார் மயமாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்வே துறை தனியார்மயம் ஆனால் மக்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படும் என SRMU மாநில தலைவர் ராஜா ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார்மயம் ஆனால் அவர்கள் வருமானம் வரக்கூடிய முதல் வகுப்பு பெட்டிகளை மட்டுமே கவனிப்பார்கள். மற்ற பெட்டிகளில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட கிடைப்பது கடினம் என அவர் கூறியுள்ளார். மத்திய அரசு 400 ரயில் நிலையங்களை தனியாருக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |