தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்துபுதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் செய்தி ஊடக ஆசிரியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய அவர், “கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் அமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தனியார் ஆம்புலன்ஸ்களில் அதிக கட்டணம் வசூல் என புகார் வரவே, கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்தது. ஆனால் 108 ஆம்புலன்ஸுக்கு கட்டணம் என செய்தி பரவுகிறது” என தெரிவித்துள்ளார்.