தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் பணி ஓய்வு பெறும் தனியார் ஊழியர்களுக்கு பென்ஷன் கொடுப்பது குறித்து பரிசீலனை செய்வதற்காக விஷ்வாஸ் என்ற திட்டத்தை சோதனை முறையில் முதலில் லூதியானாவில் மட்டும் தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் லூதியானா பகுதியில் மட்டும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. பணி ஓய்வு பெறும் தனியார் ஊழியர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஆவணம் சம்பந்தப்பட்ட வேலைகளை இந்த குழு முடிக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் பணி ஓய்வு பெறும்போது பென்சன் சான்றிதழ் வழங்கப்படும்.
அந்த வகையில் ஏப்ரல் மாதம் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஏப்ரல் 29-ஆம் தேதி பென்ஷன் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதில் 84 பேர் பென்ஷன் பெறுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்கள். அதன்படி பணி ஓய்வு பெறும் மாதத்தில் ஊழியர்களுக்கு பிஎஃப் பணம் கொடுக்கப் படவேண்டும். அதன்பின்னர் பிஎஃப் அலுவலகத்துக்குச் சென்று உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பென்ஷன் பெற கோரிக்கை முன் வைக்கலாம். மாதத்தின் 15ஆம் தேதிக்கு முன்பாகவே பணி ஓய்வு பெறுபவர்கள் ECR சமர்ப்பிக்க வேண்டும். இத்திட்டம் மற்ற இடங்களில் பின்னர் தொடங்கப்படும் என்று EPFO தெரிவித்துள்ளது.