Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில்… ரூ 25 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு…50 கொள்ளையர்களை பிடிக்க முயன்றபோது போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… பரபரப்பு…!!!

தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ரூ 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்ற 50 கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர் அருகில் பெரியகுப்பத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை 2,700 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆலைக்கான கட்டுமான பணிகள் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஆரம்பித்தது. இதற்காக பெரிய இரும்பு தளவாட பொருட்கள், தாமிரக் கம்பிகள் ஆலய வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2011ம் வருடம் தாக்கிய தானே புயலில் ஆலை கட்டிடங்கள் சேதமாகியது.

அதன்பின் அங்கு பணிகள் எதுவும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பில் பொருட்கள் ஆலையில் குவிக்கப்பட்டுருப்பதால் 30-க்கும் அதிகமான காவலாளிகள் சுழற்சி முறையில் பணியில் அமர்த்தப்பட்டு இரவுபகலாக பாதுகாத்து வருகின்றனர். ஆலையில் இருக்கின்ற தளவாடங்கள் பற்றி அறிந்த கொள்ளையர்கள் தங்களது கைவரிசையை காட்ட ஆரம்பித்தார்கள். கடந்த மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவில் 50-க்கும் அதிகமான கொள்ளையர்கள் ஆலயத்திற்குள் நுழைந்து இரும்பு பொருட்களை திருடி சென்றார்கள்.

இதை அறிந்து அங்கு சென்ற காவல்துறையினரை பார்த்ததும் கொள்ளையர்கள் தப்பித்து ஓடினார்கள். அவர்கள் விட்டு போன இரண்டு சரக்கு வாகனங்கள், 26 பைக்குகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனை அடுத்து 26-ம் தேதி நள்ளிரவு மற்றொரு கொள்ளை கும்பல் ஆலையில் பொருட்களை திருடிச் சென்று படகில் ஏற்றி கடல்வழியாக கடத்த முயன்றுள்ளார். அந்த கும்பல் காவல்துறையினரை பார்த்ததும் தப்பித்து ஓடினார்கள். அந்த ஆலையில் திருட்டு சம்பவம் அரங்கேறிய நிலையில் இதுவரை அந்த ஆலையில் இருந்து 2,000 டன்னுக்கு மேல் இரும்பு பொருட்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டிரோன் மூலமாக ஆலை கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 9-ஆம் தேதி இரவு ஆலை கண்காணிப்பாளர் ரவி தலைமையில் காவலாளிகள் பணியில் இருந்தபோது நள்ளிரவு ஒரு மணி அளவில் ஏதோ பொருட்கள் விழும் சத்தம் கேட்டுள்ளது. இந்த சத்தத்தை கேட்டு அங்கு பணியில் இருந்த காவலர்கள் அங்கு சென்று பார்த்த போது அதிகமான கொள்ளையர்கள் ஆலை வளாகத்தில் கிடந்த இரும்பு குழாய் உள்ளிட்ட பொருட்களை திருடி கொண்டிருந்தார்கள்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவலாளிகள் உடனே புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இத்தகவலை அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது காவல்துறையினரை கண்டதும் கொள்ளையர்கள் தப்பிக்க முயன்றார்கள். கொள்ளையர்கள் அருகே இருந்த செடிக்குள் சென்று மறைந்து விட்டார்கள். இதனையடுத்து காவல்துறையினர் கொள்ளையர்களை வெளியே வருமாறு எச்சரிக்கை விடுத்தனர். அதற்கு கொள்ளையர்கள் எங்களை பிடிக்க முயற்சி செய்யாதீர்கள்.அப்படி செய்தால் விபரீதம் நடக்கும் என்று மிரட்டினார்கள்.

மேலும் ஏற்கனவே காலி மது பாட்டில்களை நிரப்பி தயார் செய்து வைத்திருந்த ஐந்து குண்டுகளை எடுத்து காவல்துறையினர் மீது வீசினார்கள். இதில் 3 வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. மற்ற இரண்டு பெட்ரோல் குண்டுகள் வெடிக்கவில்லை. காவல்துறையினர்கள் தந்திரமாக விலகிக் கொண்டதால் காயமில்லாமல் தப்பித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த காவல்துறையினரும், காவலாளிகளும் அங்கிருந்து சற்று தூரம் சென்று நின்று பார்த்தபோது கொள்ளையர்கள் ஆலையிலிருந்து ரூ 25 லட்சம் மதிப்புள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றார்கள்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ்ராஜ், புதுச்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அதன்பின் வெடிக்காமல் இருந்த 2 பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றி புதுச்சத்திரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து 50 கொள்ளையர்களை வலைவீசி தேடி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்புக்காக நிறைய காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளார்கள்.

Categories

Tech |