சாத்தான்குளம் அருகே உள்ள தனியார் காப்பகத்தில் சிறுவர்களை வேலை செய்யுமாறு துன்புறுத்திய நிர்வாக அதிகாரியை போலீசார் கைது செய்தார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அருகே இருக்கும் ஆனந்தபுரத்தில் தனியார் சிறுவர் காப்பகத்தில் சிறுவர்களை அதன் நிர்வாகிகள் வேலை செய்யுமாறு துன்புறுத்தி வந்ததால் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்கள் மூலம் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார்கள்.
இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ் அந்த காப்பகத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது அரசின் உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து காப்பகத்தின் நிர்வாகிகளான தாம்சன் தேவசகாயம் மற்றும் அவரின் மனைவி ஷீலா உள்ளிட்டோரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தார்கள். பின் தாம்சன் தேவசகாயத்தை போலீசார் கைது செய்தார்கள். மேலும் காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டு அங்கு தங்கியிருந்து சிறுவர், சிறுமிகளை அருகில் இருக்கும் காப்பகத்தில் சேர்த்தார்கள்.