Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் திடீர் சோதனை”… நான்கு பேர் கைது…!!!!

தெற்கு துணை கமிஷனர் மேற்பார்வையின் தெற்கு வாசல் போலீஸ் அதே பகுதியில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகம் ஒன்றில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசிக், சதாம் உசேன், அன்வர், வல்லவன் போன்ற நான்கு பேரையும் கைது செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய இராமு ஜனார்த்தனன் ஆகிய இரண்டு பேர் தலைமறைவாக இருக்கின்றனர் என மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |