Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உங்கல மட்டும் இல்லைங்க எங்களையும் தான்….. 1 லட்சம் வரை மோசடி …. கைது செய்த காவல் துறையினர்..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மோசடி செய்துள்ளனர்.

புதுக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை கிளை மேலாளர் மற்றும் 3 ஊழியர்கள் ஒன்று  சேர்ந்து மற்றொரு நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த அந்த தனியார் நிறுவனம் தரப்பில் வாடிக்கையாளர்கள் ஒன்று சேர்ந்து மோசடி செய்த நிதி நிறுவன மேலாளர்கள்  மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் நிதி நிறுவனத்தின் மேலாளர் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அந்த விசாரணையின் போது 1 லட்சம் வரை அடகு வைத்து மோசடி செய்தததாக அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து  அவர்களிடம் இருந்து நகைகளை மீட்டு காவல் துறையினர் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |