தமிழக அரசு தமிழ் மக்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் 80 சதவீதம் வேலை வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதாவது தமிழகத்தில் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் திமுக தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில்நுட்ப படிப்புகளில் தமிழ் மொழியில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு, தமிழக கோவில்களில் தமிழில் அர்ச்சனை திட்டம் என பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதேபோல் “தமிழ் மொழித்தேர்வு” அரசு பணி தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழகத்தில் உள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பினை தமிழர்களுக்கு வழங்கும் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.