Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவனத்திடம் கொடுத்ததை ரத்து செய்யுங்க… பாய்லர் ஆலை சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!

திருவெறும்பூரில் பாய்லர் ஆலை சி.ஐ.டி.யு தொழிற் சங்கத்தினர் போராட்டம் நடத்தினார்கள்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பாக பாய்லர் ஆலை சிஐடியு தொழிற்சங்கம் சார்பாக முறையீடு போராட்டம் நடத்தப்பட்டது. சங்க பொது செயலாளர் பிரபு தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் எண்ணூர் 660 மெகாவாட் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான பணியை தனியார் நிறுவனத்திற்கு கொடுத்ததை ரத்து செய்து அதை பாய்லர் ஆலைக்கு கொடுக்க வேண்டும்.

மேலும் திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. அதன்பின் இது குறித்த மனுக்களை திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அலுவலகத்தில் அவருடைய  தனி உதவியாளரிடம் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |