Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனத்தில் அனுபவம்… போலி ஆவணம் தயாரித்து மோசடி… போலீசில் சிக்கிய கும்பல்…!!!

டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயாரித்து வந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை போன்ற அடையாள அட்டைகளை போலியாக தயார் செய்து மர்ம கும்பல் மோசடி செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமன்றி தனியார் வங்கியில் போலி ஆவணங்களுடன் சிலர் பணப்பரிமாற்ற அட்டைக்கு விண்ணப்பித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் போலீசார் அந்த மர்ம கும்பல் தீவிரமாக தேடி வந்தனர். இந்த மோசடியில் கடந்த நான்காம் தேதி 8 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பிறகு அவர்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், ஆதார், பான் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி அதிக அளவிலான பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் மங்கல் புரியை சேர்ந்த உமேஷ் சந்தர், ரவிசாதேவா ஆகியோர் சிக்கியுள்ளனர். அவர்களில் உமேஷ் என்பவர் ஆதார் தகவல்களை செயல்படுத்தும் ஒரு நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதனால் தனியே ஒரு நிறுவனத்தை தொடங்கி போலி ஆவணங்களை தயாரித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த இரு நபர்களையும் கைது செய்தனர்.

Categories

Tech |